Connect with us

🎬 தனுஷ் – வினோத் கூட்டணி படம்: ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்

Cinema News

🎬 தனுஷ் – வினோத் கூட்டணி படம்: ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் எச். வினோத் இணைந்து உருவாக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கிய பிறகு, எச். வினோத் தற்போது தனுஷை நாயகனாக வைத்து புதிய கதையுடன் படம் இயக்கத் தயாராகி வருகிறார். இந்த படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்க உள்ளார், மேலும் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் – வினோத் கூட்டணி முதன்முறையாக உருவாகும் இந்த படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top