Connect with us

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – TTV தினகரன் வலியுறுத்தல்

Featured

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – TTV தினகரன் வலியுறுத்தல்

மக்கள் அனைவருக்கும் பயன் தரும் உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனவரி 16ம் தேதியான இன்று நாடு முழுவதும் திருவள்ளூர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருவள்ளுவர் தினமான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் திருக்குறளை போற்றி திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சாதி, மதம், மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து சமுகத்தினருக்கும் பொருந்தக் கூடிய கருத்துக் கருவூலமான திருக்குறளை படைத்த திருவள்ளுவரின் தினம் இன்று.

மக்கள் அனைவருக்கும் பயன் தரும் சிந்தனைகளை கொண்ட உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற இதயதெய்வம் அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top