Connect with us

இவ்ளோ நாள் மறச்சுட்டீங்களே : கூச முனுசாமி வீரப்பன் தொடரில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு..!!

Cinema News

இவ்ளோ நாள் மறச்சுட்டீங்களே : கூச முனுசாமி வீரப்பன் தொடரில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு..!!

கூச முனுசாமி வீரப்பன் வெப் தொடரின் விடுபட்ட காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டியுள்ளது.

தமிழகம் கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சந்தன மரம் கடத்தல் வீரப்பன்.

போலீஸ் மற்றும் அரசியலில் இருப்பர்வர்களுக்கு வில்லனாக தெரிந்தாலும் பல குடும்பங்களுக்கு சோறு போட்ட ஹீரோவாக வீரப்பன் வலம் வந்தார் .

சந்தன மரம் கடத்தல் , யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்பட்டாலும் அவரது நிழலை கூட தொட முடியாமல் இரு மாநில காவல் துறைகள் திக்குமுக்காடின.

வீரப்பன் மீது தமிழகம் மற்றும் கர்நாடக ,மாநிலங்களிலும் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் காவல்துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்த வீரப்பனை கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் விஜய்குமார் தலைமையிலான போலீசார் சுட்டுக் கொன்றனர்.

வீரப்பனின் இறப்புக்கு பின் அவரது மரணம் குறித்து ஏகப்பட்ட கட்டு கதைகள் வலம் வந்த நிலையில் வீரப்பன் குறித்து பல ஆவணப் படங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் வெளியாகின . அந்த வகையில் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

கூச முனுசாமி வீரப்பன் என பெயரிடப்பட்ட இந்த ஆவண தொடரை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.

இந்த தொடர் கடந்த டிசம்பர் மாதம் ஜீ தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வீரப்பனின் இன்று முகத்தை வெளியில் காட்டியது .

இந்நிலையில், அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரம்சாலாவில் தர்மஅடி கொடுக்குமா CSK..? டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top