Connect with us

இணையத்தை கலக்கும் கங்குவா படத்தின் 2nd லுக் போஸ்டர்..!!

Cinema News

இணையத்தை கலக்கும் கங்குவா படத்தின் 2nd லுக் போஸ்டர்..!!

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா படத்தின் 2nd லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் வரலாற்று படம் தான் கங்குவா.

ஏராளாமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

பல ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கங்குவா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா நிறைவு செய்தார். இதனை நடிகர் சூர்யாவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தின் 2 nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது ஒருபுறம் போர் தளபதி போல் இதுற்கும் சூர்யாவும் மறுபக்கம் செம ஸ்டைலாக இருக்கும் சூர்யாவும் இருப்பது போல் தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top