Connect with us

இரவு நேரத்தில் நடமாடும் டவுசர் கொள்ளையர்கள் – பீதியில் குடியிருப்புவாசிகள்..!!

Featured

இரவு நேரத்தில் நடமாடும் டவுசர் கொள்ளையர்கள் – பீதியில் குடியிருப்புவாசிகள்..!!

தமிழகத்தில் இரவு நேரத்தில் நடமாடும் டவுசர் கொள்ளையர்களால் குடியிருப்பு வாசிகள் தற்போது மரண பீதியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்ப்பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் அதிகம் நடமாடுவதாகவும், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்துத் திருட முயல்வதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டவுசர் கொள்ளையர்களால் பல குழுக்களாக பிரிந்து பல ஊர்களில் ஒதுக்குபுறமாக இருக்கும் வீடுகளில் கைவரிசை காட்டி வருவதாகவும் உடல் முழுக்க எண்ணெய் மற்றும் கிரீஸ் ஊசி திருட்டில் ஈடுபடுவதாகவும் வெளியாகும் தகவல் குடியிருப்பு வாசிகள் மத்தியில் மரண பீதியை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை தேர்தல் நேரம் என்பதால் கண்காணிப்பு, ரோந்து பணிகள் அதிகமாக உள்ளது டவுசர் கொள்ளையர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் எந்தவித குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பில்லை சிசிடிவி காட்சிகளில் வருவதுபோன்ற சம்பவங்கள் தற்போது நிகழ வாய்ப்பில்லை என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் 2 கார்… பின்னால் இருக்கும் அப்பா–அம்மா போராட்டம் | MS Bhaskar Daughter Post 🔥

More in Featured

To Top