Connect with us

ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் ‘சத்யா’ – ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா..?

Cinema News

ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் ‘சத்யா’ – ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா..?

உலகநாயகன் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான சத்யா படம் தற்போது ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகம் போற்றும் உலகநாயகன் கமல்ஹாசன்.

69 வயதாகும் நடிகர் கமல்ஹாசன் தற்போது பல மெகா கூட்டணியில் இணைந்துள்ளார் . அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் வெற்றி படங்களில் ஒன்றான சத்யா திரைப்படம் கடந்த 1988ல் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது .சூப்பர் ஸ்டாரின் பாட்சா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படமே இந்த சத்யா தான்.

கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கிய படமாக பார்க்கப்படும் சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது .

போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் நடிகர் அசோக் செல்வன் கமல்ஹாசனின் கதாபாத்திரை ஏற்று நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் தற்போது கையில் எடுக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top