Connect with us

🔥 ‘தாய் கிழவி’ வசூலில் நல்ல தொடக்கம் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Cinema News

🔥 ‘தாய் கிழவி’ வசூலில் நல்ல தொடக்கம் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “தாய் கிழவி” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருப்பதால் படம் முழுக்க இயல்பான நடிப்பும் உணர்ச்சியும் கலந்த அனுபவத்தை தருகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

குடும்ப உணர்வு, நகைச்சுவை மற்றும் சமூக சிந்தனைகளை சமநிலையாக இணைத்திருக்கும் இந்த படம் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்து வருகிறது. இப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் சுமார் 3.3 கோடி ரூபாயாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி, ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு இது சிறந்த ஓப்பனிங் என சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top