Connect with us

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மெகா ஸ்டாருடன் இணையும் நடிகை த்ரிஷா

Chiranjeevi_Trisha

Cinema News

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மெகா ஸ்டாருடன் இணையும் நடிகை த்ரிஷா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் தயாராக உள்ள விஸ்வம்பரா என்ற படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.

1999இல் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, 25 ஆண்டுகளாக திரையுலகில் நடிகை த்ரிஷா கோலோச்சி வருகிறார். ஒரு சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக த்ரிஷா வலம் வந்தார்.

எனினும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்து திரைப்படங்களில் நடிப்பது குறைந்த நிலையில் 2018இல் வெளியான 96 என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் லியோ படங்களில் நடித்தோடு, மீண்டும் அதிக படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தற்போது நடிகர் அஜித் குமாரின் விடா முயற்சி படத்தில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்து மலையாளத்தில் மோகன் லாலுடன் ராம், தமிழில் கமலுடன் தக் லைஃப் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் த்ரிஷாவை வரவேற்று ஒரு பதிவை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இருவரும் கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2006இல் ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top