Connect with us

“தளபதி 68 படத்தில் வரும் DE-Aging காட்சிகளுக்கு இத்தனை கோடி ஆகுமா?! வெளியான Latest Update!”

Cinema News

“தளபதி 68 படத்தில் வரும் DE-Aging காட்சிகளுக்கு இத்தனை கோடி ஆகுமா?! வெளியான Latest Update!”

தளபதி விஜய் நடித்து வரும் ’Thalapathy 68’ திரைப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இளவயது வேடம் ஒன்றில் நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின, இந்த இளவயது கேரக்டருக்காக சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று இள வயது வேடத்திற்கான தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அவரது உருவத்தை முழுவதும் ஸ்கேன் செய்து DE-Aging டெக்னாலஜி மூலம் அவரை இளமையாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. ’Thalapathy 68’ திரைப்படத்தில் விஜய் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இளமையான காட்சிகளில் தோன்ற இருக்கும் நிலையில் அதற்காக செய்த செலவு மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது ’Thalapathy 68’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், AGS நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top