Connect with us

“பெரிய தப்ப தடுக்க சின்ன தப்பு பண்ணா தப்பே இல்ல” – கீர்த்தி சுரேஷின் “ரகு தாத்தா” படத்தின் டிரைலர் வெளியானது..!!

Cinema News

“பெரிய தப்ப தடுக்க சின்ன தப்பு பண்ணா தப்பே இல்ல” – கீர்த்தி சுரேஷின் “ரகு தாத்தா” படத்தின் டிரைலர் வெளியானது..!!

கீர்த்தி சுரேஷின் கலகலப்பான நடிப்பில் உருவாகி உள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பல முன்ணனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தமிழ், தெலுங்கு, என பல மொழி படங்களில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வரும் இவருக்கு நவரச நாயகி என்ற பட்டமும் ரசிகர்கள் கொடுத்து அப்படியே அழைத்தும் வருகின்றனர் .

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் ரகு தாத்தா . சுமன் இயக்கத்தில் உருவான இப்படத்தை humbale films தாராள பொருட்செலவில் தயாரித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்த்து எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது பலமான வசனங்களை கொண்ட இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரைலர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top