Connect with us

டூரிஸ்ட் ஃபேமிலி திரைவிமர்சனம்..

Featured

டூரிஸ்ட் ஃபேமிலி திரைவிமர்சனம்..

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம், “குட் நைட்”, “லவ்வர்” படங்களை போலவே தரமான ஒரு குடும்பக்கதை.

டீசர் வந்த நாளிலிருந்து எதிர்பார்ப்பு சூட்சுமமாக இருந்தது. இன்று வெளியானது. படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இலங்கையில் வாழ முடியாத நிலை. குடும்பத்துடன் சசிகுமார் இந்தியா வருகிறார். ராமேஸ்வரத்தில் போலீசாரிடம் சிக்கிக்கொள்கிறார். ரமேஷ் திலக் என்ற போலீசாரின் புரிதலால் விடுவிக்கப்படுகிறார்கள்.

பின்னர், யோகி பாபுவின் உதவியுடன் சென்னைக்கு வருகிறார்கள். ஒரு காலனியில் குடியிருந்து, வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். சசிகுமார் வேலை தேட, குடும்பத்தை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார். அதற்கிடையில் ராமேஸ்வரத்தில் குண்டு வெடிப்பு. சந்தேகம் இவர்களின் மீது விழுகிறது. போலீசார் வட்டமிட்டுக் கடுமையாக விரட்டுகின்றனர்.இந்தக் குழப்பத்தில் அந்த குடும்பம் என்ன செய்யும்? எவ்வாறு மீள முடியும்? என்பதே கதையின் கிளைமாக்ஸ்.

சசிகுமார், சிம்ரன் இருவரும் மனதுக்கு நெருக்கமான நடிப்பு கொடுத்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஹைலைட். எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் போன்ற நடிகர்கள் சிறப்பாக தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். இது ஒரு அறிமுக இயக்குநரின் படம் என்பதே நம்ப முடியாது. மனிதநேயம் கலந்த ஒரு உணர்ச்சி சுமந்த படைப்பு. ஷான் ரோல்டனின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படம் தரத்தை உயர்த்துகின்றன.

ப்ளஸ் பாயிண்ட் – சசிகுமார், சிம்ரன், சிறந்த நடிகர்கள். உணர்வுப்பூர்வமான திரைக்கதை. ஹார்ட் டச்சிங் இசை. மைனஸ் பாயிண்ட் – எதுவும் இல்லை. முடிவாக, நாம் எந்த நாட்டில் இருந்தாலும் அன்பு இருந்தால் அகதியாக தெரியமாட்டோம். அந்த மெசேஜ் இந்த “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் அழகாக சொல்லியுள்ளது.ஒரு தரமான குடும்ப திரைப்படம். கண்டிப்பாக பார்க்க வேண்டியது தான்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top