Connect with us

டூரிஸ்ட் ஃபேமிலி: முதல் விமர்சனத்தில் எப்படி இருக்கிறது படம்?

Featured

டூரிஸ்ட் ஃபேமிலி: முதல் விமர்சனத்தில் எப்படி இருக்கிறது படம்?

சசி குமார், சிம்ரன் இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவனித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. “குட் நைட்”, “லவ்வர்” போன்ற தரமான திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உருவாகியது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது, அது பெரும் வரவேற்பை பெற்றது.

மே 1ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் சமீபத்தில் திரையிடப்பட்டு, திரையுலகத்தின் முக்கிய நபர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். அதில், லைகா தயாரிப்பு நிறுவனத்தின் ஹெட் தமிழ் குமரன் “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தை பார்த்து மிக சிறப்பான திரைப்படம் என தெரிவித்துள்ளார்.

திரையரங்க உரிமையாளர்களும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். இயக்குநர் TJ ஞானவேல், மணிகண்டன், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். இதனால், “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் 2025 தமிழ் சினிமாவின் சிறந்த தரமான சம்பவமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகள் திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா? ஐசரி கணேஷின் பிரம்மாண்ட ஏற்பாடு!

More in Featured

To Top