Connect with us

மிக்‌ஜாம் புயல் காரணமாக திரையரங்குகளில் நாளைய காட்சிகள் ரத்து..!!

Featured

மிக்‌ஜாம் புயல் காரணமாக திரையரங்குகளில் நாளைய காட்சிகள் ரத்து..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் , திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நாளையும் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை வெளுத்துவாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது .

அதற்கேற்றார் போல் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை சக்கை போடு போட்டது . மேலும் புயல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை மையமும் தமிழக அரசும் கேட்டுக்கொண்டது .

இதுமட்டுமின்றி மிக்‌ஜாம் புயல் காரமனாக நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்வது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாகவும் . புயல் நேரத்தில் திரையரங்குகள் செயல்படுவது சரியானது அல்ல என்பதால் நாளை காட்சிகள் ரத்து செய்ய அதிக வாய்ப்பு இருப்பதால் இறுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Suriya 47 Begins! பூஜை புகைப்படங்கள் வெளியானதும் வைரலாகி Trending 🔥"

More in Featured

To Top