Connect with us

பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் – ஆஸ்திரேலியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு..!!

Featured

பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் – ஆஸ்திரேலியா அணிக்கு 161 ரன்கள் இலக்கு..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 5 வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161 ரன்கள் குவித்துக்குள்ளது.

விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர் .

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் 3 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி உள்ளது .

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது .

இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்தது . இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் களமிறங்கினர் .

அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 21 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து வந்த கேப்டன் சூர்யாவும் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது.

இதையடுத்து இளம் வீரர் ரிங்கு சிங் 6 ரன்னில் வெளியேற மற்றொரு வீரரான ருத்துராஜ் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் . அவரை தொடர்ந்து வந்த ஜிதிஷ் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார் . பொறுப்புடன் ஆடிய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் அரை சதம் கடந்து அணிக்கு டீசெண்டான ஸ்கோரை வரவழைக்க பாடுபட்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது . இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த தடாரின் கடைசி டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்த இரு அணிகளில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அந்த தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in Featured

To Top