Connect with us

“பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை ” – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு அரசு

Featured

“பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை ” – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுரிப்பில் கூறியதாவது :

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் முன்பே அறிவித்திருந்தனர் .

இந்நிலையில் தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல மொழி படங்களில் பட்டயகிளப்பும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

More in Featured

To Top