Connect with us

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஜோதிகா..!!

Cinema News

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஜோதிகா..!!

தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் இன்று தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது.

இந்த விழாவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .

சிறந்த படத்துக்கான முதல் பரிசை தனி ஒருவன் படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி பெற்றுள்ளார்.

சிறந்த படத்துக்கான இரண்டாம் பரிசை பசங்க -2 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்துக்கான மூன்றாம் பரிசை பிரபா என்ற படம் பெற்றுள்ளது .

சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு மாதவன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது .

சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த மாதவனுக்கும் , சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவுகும் வழங்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top