Connect with us

கடலில் விழுந்து காணாமல் போன குடும்பத்தலைவர் – உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்

Featured

கடலில் விழுந்து காணாமல் போன குடும்பத்தலைவர் – உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்

கன்னியாகுமரி அருகே உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் .

இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 14.01.2024 அன்று IND-TN-15-MM-4636 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காய்ப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த A.ஜலாலுதீன் எனபவர் விசைப்படகில் சமையல் பணிக்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21.01.2024 அன்று காலை 5.30 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகிலிருந்து ஜலாலுதீன் கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

அவரை மீட்க பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள A.ஜலாலுதீன் என்பவரது குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Featured

To Top