Connect with us

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? சிம்ரன் மாஸ் அப்டேட்!

Featured

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? சிம்ரன் மாஸ் அப்டேட்!

விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள “துருவ நட்சத்திரம்” திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாக ரசிகர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் மீது ஏற்பட்டுள்ள சட்டபூர்வ பிரச்சனைகள் மற்றும் பிற காரணங்களால் அதன் வெளியீட்டு தேதி தொடர்ச்சியாக தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றியுள்ளார். படம் குறித்த எந்த தகவலும் கடந்த காலத்தில் வெளிவராத நிலையில், தற்போது நடிகை சிம்ரன் இப்படத்தின் வெளியீட்டை பற்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: “துருவ நட்சத்திரம் முழுமையான ஆக்ஷன் படம். அதுமட்டுமின்றி, படம் மிகுந்த ஸ்டைலிஷாகவும் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். படம் சரியான நேரத்தில் வெளியாகும். மக்கள் நிச்சயமாக இப்படத்தை விரும்புவார்கள். படத்தில் விக்ரம் மிகவும் ஸ்டைலிஷாக நடித்துள்ளார்,” என்றார். இது திரை ரசிகர்களிடையே மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தி தெரியாது சொல்லி தமிழில் பேசிய தனுஷ்… குபேரா விழா வீடியோ வைரல்..

More in Featured

To Top