Connect with us

அகில் திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி-ஷர்ட் விலை இத்தனை லட்சமா?

Featured

அகில் திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி-ஷர்ட் விலை இத்தனை லட்சமா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் அக்கினேனி திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அகில் தனது நீண்டநாள் காதலி ஜைனப் ரவுட்ஜியுடன் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு, பிரமாண்டமான வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கு மற்றும் தெற்கிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். முக்கியமாக சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, நானி, கன்னட நடிகர் சுதீப், யஷ், மற்றும் தமிழ் நடிகர் சூர்யா ஆகியோர் வரவேற்பில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மகேஷ் பாபு அணிந்திருந்த டி-ஷர்ட் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழாவில் மகேஷ் பாபு அணிந்திருந்த டி-ஷர்ட் விலை சுமார் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என கூறப்படுகிறது. இது பார்ப்பதற்கு மிக சாதாரணமாக இருந்த போதிலும், அதன் விலை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'சாமி' பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படம் வைரல் – தற்போதைய நிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

More in Featured

To Top