Connect with us

தக் லைஃப் விமர்சனம் – கல்ட் கிளாசிக்.. கமல்ஹாசன், சிம்பு சும்மா மிரட்டிட்டாங்க.. முதல் விமர்சனம் வெளியானது..

Featured

தக் லைஃப் விமர்சனம் – கல்ட் கிளாசிக்.. கமல்ஹாசன், சிம்பு சும்மா மிரட்டிட்டாங்க.. முதல் விமர்சனம் வெளியானது..

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர், ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, சான்யா மல்கோத்ரா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.

கர்நாடகாவில் தடை முயற்சி

‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தமிழில் இருந்து கன்னடம் உருவானது என பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்க முடியாது என மநீம தொண்டர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். இப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட வேண்டும் எனக் கோரி கமல்ஹாசன் வழக்குத் தொடர்ந்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம்

1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்திற்கு பிறகு, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் 36 ஆண்டுகள் கழித்து இணைந்து பணியாற்றியுள்ளனர். ‘நாயகன்’ திரைப்படம் ‘காட் ஃபாதர்’ திரைப்படத்தின் தாக்கத்தையும் வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்தப் படம் தேசிய விருதுகளை வென்றது. தற்போது, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முதல் விமர்சனம் வெளியானது

மும்பையில் தணிக்கை செய்யப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் இந்தி பதிப்பை பார்த்ததாகும் விமர்சகர் உமைர் சந்து கூறியுள்ளார். அவர் தனது சமூக ஊடகத்தில், “‘தக் லைஃப்’ ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர். நடிகர்கள் அனைவர் நடிப்பும் புல்லரிக்க வைக்கும். கமல்ஹாசன் மற்றும் எஸ்டிஆர் பவர் பேக்‌டட் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது” என குறிப்பிட்டு, 5க்கு 3.5 ஸ்டார்கள் அளித்துள்ளார். முந்தைய ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கும் இதே விமர்சகர் அதேபோல் விமர்சனம் அளித்ததை நினைவுகூரும் நெட்டிசன்கள், “நம்ம ஊர் பயில்வான் ரங்கநாதன் போல இவரும் அடிச்சு விடுறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

படத்திற்கு இலவச விளம்பரம்?

See also  லோகேஷ் கைதி 2 ஹீரோயின் இவரா? யாரும் எதிர்பார்க்காத நடிகை!

‘தக் லைஃப்’ திரைப்படத்துக்காக ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் பல நகரங்களில் பிரமாண்ட விளம்பர வேலைகளை செய்துள்ளார். தற்போது கர்நாடகாவில் ஏற்பட்ட தடைகள் உள்ளிட்ட விவகாரங்கள், படத்துக்கு மேலும் இலவச விளம்பரத்தை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவுக்கு அதிரடியான வரவேற்பு

‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு, ‘இந்தியன் 2’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால் ‘தக் லைஃப்’ படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர் என்பதால், ரசிகர்கள் இதில் மிகுந்த நம்பிக்கையுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்களும் வெளியான பின்னர் பெரிய ஹிட்டாகி, படத்திற்கு சிறந்த விளம்பரமாக அமைந்துள்ளது. ‘தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்யும் என்பது ஜூன் 5ஆம் தேதிக்குப் பிறகே தெரியும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top