Connect with us

தக் லைப்’ கர்நாடகாவில் தடை – கமலுக்கு கோடிக்கணக்கில் நஷ்டமா?

Featured

தக் லைப்’ கர்நாடகாவில் தடை – கமலுக்கு கோடிக்கணக்கில் நஷ்டமா?

நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழியை பற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கர்நாடக அரசியல்வாதிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக நடிகர் கமல், “மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது” எனத் தெளிவாக கூறியுள்ளார்.

“தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது” என அவர் மேற்கொண்ட கருத்து தான் இப்போதைய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதே நேரத்தில், “நான் எதுவும் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பின்னணியில், கமல் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தக் லைப் திரைப்படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமை ரூ.20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், படம் அங்கு வெளியாகாத பட்சத்தில் ரூ.20 முதல் ரூ.25 கோடி வரை நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சின்ன வயசுல நிறைய தப்புகள் பண்ணியிருக்கேன்" – பாடகர் கிரிஷின் மனம் திறந்த பேட்டி..

More in Featured

To Top