Connect with us

பூமியை காக்க அயலான் வந்தாச்சு – SKவின் அயலான் படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

பூமியை காக்க அயலான் வந்தாச்சு – SKவின் அயலான் படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக உள்ள அயலான் படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவின் டாப்பு டக்கர் நடிகர்களின் பட்டியலில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘அயலான்’ .

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவர்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் இயக்குநர் ரவிக்குமார் உளப்பட இப்படத்தின் குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர் இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக உள்ள இப்படம் ட்ரைலரில் இருப்பது போல் ரசிகர்களின் கவனத்தை இருந்து வெற்றி படமாக மாறுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து நீண்ட நாட்களாக திரைக்கு வரமுடியாமல் இருந்த நிலையில் ஒருவழியாக இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது படக்குழுவிற்கு சற்று ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top