Connect with us

விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு..!!

Cinema News

விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு..!!

விஜய் சேதுபதி, கத்ரினா நடிப்பில் உருவாகியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் திரையுலக ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்டுடம் விஜயசேதுபதியின் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான படம் தான் ‘மெரி கிறிஸ்துமஸ்’ .

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ராதிகா ஆப்தே, காயத்ரி சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

பாலிவுட்டில் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக் ஆகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது .

தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படம் வெற்றி படமாக அமையுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top