Connect with us

ஆத்தாடி ஆத்தா : சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியானது..!!

Cinema News

ஆத்தாடி ஆத்தா : சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியானது..!!

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள வரலாற்று படம் தான் கங்குவா.

ஏராளாமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பல ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு செய்த சூர்யா தற்போது படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்த நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த மிக பெரிய அப்டேட் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.

இதையடுத்து படத்தின் டீசரை காண ரசிகர்கள் செம ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் வரலாற்று கதைக்களம் கொண்ட கங்குவா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

டீஸரின் ஆரம்பம் முதல் இறுதி வரை செம அதிரடியாகவும் செம மிரட்டலாகவும் உள்ளது ஆனால் இதற்கு முன் வந்த கிலிம்சில் எப்படி வசனமே இல்லையோ இந்த டீசரில் வசனம் இல்லை.

ஆகமொத்தம் படம் பிரம்மாண்டத்திற்கும் அதிரடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த அந்த டீசரை பார்த்து எப்படி உள்ளது என்பதை எங்களுடன் கமெண்ட் செக்சனில் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்புடன் ஆடிய பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top