Connect with us

சூர்யாவின் புறநானூறு படம் குறித்து வெளியான புதிய அப்டேட்..!!

Cinema News

சூர்யாவின் புறநானூறு படம் குறித்து வெளியான புதிய அப்டேட்..!!

சுதா கொங்கரா – சூர்யா காம்போவில் உருவாக இருக்கும் புறநானூறு படம் குறித்த ,முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நடிகர் விரைவில் தனது அடுத்தகட்ட அப்டேட்டுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்தவகையில் நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 43 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி அனைவரையும் குஷி படுத்தியது .

புறநானூறு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது . மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் , துல்கர் சல்மான், நஸ்ரியா, பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மா உட்பட பலர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படத்திற்கு நம்ப ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசைமைக்க உள்ளார் . இது அவரின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வைத்த நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது .

அந்த அப்டேட் என்னவென்றால் ‘புறநானூறு’ படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா கொங்கரா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“இந்த கூட்டணி இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எங்களது சிறந்த படத்தை கொடுப்பதற்காக பணியாற்றி வருகிறோம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SRH அணிக்கு கடின இலக்கை கொடுக்குமா RCB..? RCB டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!!!

More in Cinema News

To Top