Connect with us

போடு தகிட தகிட : நாளை மாலை வெளியாகிறது ‘கங்குவா’ பட டீசர்..!!

Cinema News

போடு தகிட தகிட : நாளை மாலை வெளியாகிறது ‘கங்குவா’ பட டீசர்..!!

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள வரலாற்று படம் தான் கங்குவா.

ஏராளாமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பல ஆக்சன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா நிறைவு செய்த சூர்யா படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தின் டீசர் நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத்தை அடித்து துவைத்த ரிஷப் பண்ட் - டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு..!!!

More in Cinema News

To Top