Connect with us

மேக்கிங்கே தீயா இருக்கே – கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

மேக்கிங்கே தீயா இருக்கே – கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

தனுஷ் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் பட்டாசாக உருவாகி உள்ள திரைப்படம் படம் கேப்டன் மில்லர்.

மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் குளோபல் ஸ்டார் தனுஷுடன் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் டாப்பு டக்கராக தயாராகி உள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக தனுஷ் கையில் எடுக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் நாளை வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் அவரது சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இடம்பெறும் இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவின் ‘Vishwanath and Sons’ படத்தில் வயது வித்தியாச காதல்… ரசிகர்கள் ஆச்சரியம்!

More in Cinema News

To Top