Connect with us

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!!!

Cinema News

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

கலை குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்த ஒரு சில நடிகர்களின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் அருண் விஜய். நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து அந்த படத்திற்கு தனது முழு உழைப்பையும் போட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் 1 . திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் , பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிங்கத்தின் கோட்டைக்குள் ஜொலிக்குமா பஞ்சாப்..? - சேப்பாக்கத்தில் இன்று CSK - PBKS பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top