Connect with us

Update From CM : பொங்கலுக்கு 1000 உறுதி

Update From CM

Featured

Update From CM : பொங்கலுக்கு 1000 உறுதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்புடன் 1000 ருபாய் வழங்கப்படும் என (Update From CM) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும்.

இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கொடுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து இதனையும் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அறம்பட செய்யப்பட்டுள்ளது .

இந்நிலையில், பொங்கல் திருநாளை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடிட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதேபோல் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும்.

அதாவது, வரும் 10 ஆம் தேதி , மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Also Read : https://www.cinemamedai.com/dhanushs-captain-miller-trailer-will-releases-on-tomorrow/

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 வழங்கப்படாமல் இருந்ததற்கு பொதுமக்கள் அனைவரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர் .

இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு (Update From CM) பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் அனைவரும் நன்றி கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top