Connect with us

விஜய் நடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

Cinema News

விஜய் நடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் ரிலீஸ் குறித்த சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .

அந்த அப்டேட் என்னவென்றால் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குளில் வெளியாக உள்ளதாக டக்கரான போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top