Connect with us

விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி உள்ள விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று விடுதலை . சூரி , விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான இப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இதையடுத்து விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகளும் இனிதே முடிவடைந்தது .

இந்நிலையில் இப்படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 2’ எதிர்வரும் டிச.20ம் தேதி வெளியாகும் என படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மாபெரும் வெற்றியை தேடித்தந்த விடுதலை படத்தின் முதல் பாகத்தை போலவே இப்படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினி 173 ஏப்ரலில் தொடக்கம் – சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மெகா படம்”

More in Cinema News

To Top