Connect with us

தி கோட் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – வைரல் வீடியோ..!!

Cinema News

தி கோட் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – வைரல் வீடியோ..!!

வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்ற கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் முதல்முறை உருவான திரைப்படமே தி கோட். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இப்படத்தில் விஜயுடன் பிரபு தேவா , மோகன் , பிரஷாந்த் , வைபவ் , சினேகா ,லைலா , மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல புதிய தொழில்நுட்பங்களுடன் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் அசத்தலான வெற்றியை ருசித்தது.

இதுமட்டுமின்றி இப்படமா உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் அர்ச்சனா, தமிழ்நாடு விநியோகஸ்தர் ராகுல் -உடன் நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top