Connect with us

பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் : சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே..!!

Featured

பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் : சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே..!!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சி.எஸ்.கே அணியின் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

மக்களவைத் தேர்தல் அட்டவணை இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதால் தற்போதைக்கு ஐபிஎல் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை மடுட்மே வெளியிடப்பட்டுள்ளது .

மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2ம் கட்ட அட்டவணை வெளியாகும் என ஐபிஎல்
நிர்வாகம் தெரிவித்துள்ளது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

டிக்கெட் விற்பனை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்தாண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top