Connect with us

சதிஷ் நாயகனாக நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

சதிஷ் நாயகனாக நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

நகைச்சுவை நடிகர் சதிஷ் கதாநாயகநாக நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமவில் நகைச்சுவை நடிகராக கலைப்பயணத்தை தொடங்கி தற்போது நாயகனாக உருமாறியுள்ள நடிகர் சதிஷ் தற்போது அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் கதாநாயகநாக நடித்துள்ளார்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .மேலும் இப்படத்தில் சதிஷ் உடன் ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ் உள்ளதா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சதிஷ் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படமான இப்படம் அவருக்கு வெற்றியை தேடி தருமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top