Connect with us

’சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது’… நிர்மலா சீதாராமனுக்கு எச்சரிக்கை சேகர்பாபு..!!

Featured

’சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது’… நிர்மலா சீதாராமனுக்கு எச்சரிக்கை சேகர்பாபு..!!

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது :

அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட நோக்கம் கோயில்களுக்கான சொத்துக்களை யாரேனும் தவறான வழியில் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணித்து தவறுகளை தடுக்கத்தான் ஆரம்பிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் குறைகளை பதிவிடுங்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். 48 முதுநிலை திருக்கோயில்களில் சிசிடிவி பொருத்தபட்டு முழுமையாக கண்காணிக்கபட்டு வருகிறது.

சிறிய கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க 38 மாவட்டங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களை சிறப்பாக நடத்தியுள்ளோம் .

திமுக அரசு பதவி ஏற்ற பிறகு 5500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.200 உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன, 100 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன, 400 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இப்படி இந்து சமய அறநிலையத்துறையை திமுக அரசு மேமேலும் உயர்த்தி வருகிறது ஆனால் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபிக்காமல் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர் .

மத்திய அரசு சுட்டிக்காட்டம் குறைகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது . இந்துக்கள் அல்லாத யாரையும் அறங்காவலர்களாக நியமிக்கப்படவில்லை. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் 3 பேரும் , தொல்லியல் துறையை சார்ந்த 2 பேரும் கொண்ட ஆய்வுக் குழு விரைவில் ஆய்வுச் செய்ய உள்ளனர். அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற 54 முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்று முதல்வர் சிறப்பித்து இருக்கிறார்.

தமிழ் அரசின் வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டுக்கொண்டு சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  CSK வின் இலக்கு என்னவாக இருக்கும் - சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top