Connect with us

ஆப்கானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..?

Featured

ஆப்கானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..?

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மல்லுக்கட்ட உள்ளது.

இதில் மொஹாலியில் உள்ள மைதானத்தில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தூபேவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போல் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.

டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த தொடருக்கு தயாராக இந்த தொடர் மிகவும் உதவும் எனபதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

சுமார் 429 நாட்களுக்கு பின் இந்தியாவுக்காக டி20 போட்டியில் இன்று விராட் கோலி களமிறங்க உள்ளதால் அவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் செம ஆர்வமாக உள்ளனர் . கடைசியாக 2022 நவம்பரில் இங்கிலாந்துக்கு டி20 போட்டியில் விராட் கோலி விளையாடினார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரண்டாவது டி20 போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம்? வடிவேலு குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பு 🔥🎬

More in Featured

To Top