Connect with us

“Wow! படம் பயங்கரமா இருக்கு..! பொங்கலுக்கு வெளியான படங்களில் ஒன்றை பாராட்டிய தளபதி விஜய்! என்ன படம் தெரியுமா?!”

Cinema News

“Wow! படம் பயங்கரமா இருக்கு..! பொங்கலுக்கு வெளியான படங்களில் ஒன்றை பாராட்டிய தளபதி விஜய்! என்ன படம் தெரியுமா?!”

கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது. அதனுடன் அஜித் நடித்த துணிவும் ரிலீஸாகி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தது. விஜய், அஜித்தின் படங்கள் ஒரேநாளில் ரிலீஸானதால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனாலும் வாரிசு, துணிவு இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்தன. இந்நிலையில் இந்தாண்டு அயலான், கேப்டன் மில்லர் படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகின. அதாவது கடந்தாண்டு விஜய், அஜித் இடையேயான போட்டி போல, இந்தாண்டு தனுஷ், சிவகார்த்திகேயனின் படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கின. இதில் அயலான் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அயலான் திரைப்படம் கதை திருட்டு விவகாரத்திலும் சிக்கியுள்ளது. இதனிடையே கேப்டன் மில்லர் படத்தை விஜய் பார்த்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. GOAT படப்பிடிப்பின் போது கிடைத்த கேப்பில் கேப்டன் மில்லர் படம் பார்க்கச் சென்றுள்ளார் விஜய். தனுஷின் படங்களை விரும்பி பார்ப்பேன் என ஏற்கனவே விஜய் சில இடங்களில் கூறியுள்ளார். முக்கியமாக மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சியில் பேசும் போது, அசுரன் படத்தில் தனுஷ் பேசிய வசனத்தை விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் பார்த்த விஜய் தனுஷ் உட்பட படக்குழுவினரை பாராட்டியுள்ளாராம். கேப்டன் மில்லர் பார்த்துவிட்டு GOAT ஷூட்டிங் ஸ்பாட் சென்ற விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் பேசியுள்ளார். அப்போது கேப்டன் மில்லர் பார்த்தேன் எனவும், படம் பயங்கரமா இருக்கு என்றும் பாராட்டியுள்ளார். மேலும், கேப்டன் மில்லரில் ஆக்‌ஷன் சீன்ஸ் எல்லாம் தாறுமாறு எனவும் திலீப் சுப்பராயனை ஸ்பெஷலாக வாழ்த்தியுள்ளார்.

விஜய்யின் GOAT படத்துக்கும் திலீப் சுப்பராயன் தான் ஸ்டண்ட் கோரியோகிராபி என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மில்லர் படத்தை விஜய் பாராட்டியது குறித்து திலீப் சுப்பராயன் தான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்களும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும் ரொம்பவே உற்சாகமாகியுள்ளனர். அதேநேரம் GOAT படத்திலும் தரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்திற்காக திலீப் சுப்பராயன் 100 நாட்களுக்கும் அதிகமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத்தை வீழ்த்தி வெற்றி நடைபோடுமா பெங்களூரு - சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top