Connect with us

விவேக் உடன் நடித்த நகைச்சுவை நடிகர் டெலிபோன் சுப்பிரமணி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

Featured

விவேக் உடன் நடித்த நகைச்சுவை நடிகர் டெலிபோன் சுப்பிரமணி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் டெலிபோன் சுப்பிரமணி காலமானார். அவருக்கு வயது 67. திரையுலகில் நுழைவதற்கு முன்னர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதாலேயே, ‘டெலிபோன் சுப்பிரமணி’ என்ற பெயரில் அவரை அனைவரும் அழைத்தனர்.

‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘எலி’, ‘யூனிவர்சிட்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடன் நடித்துள்ள ஹோட்டல் நகைச்சுவை காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் டெலிபோன் சுப்பிரமணி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக ஊடகங்களில் தனது இரங்கலையும், தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  VJ மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரம்மாண்ட வீடு – முழு விவரம்!

More in Featured

To Top