Connect with us

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Tamilaga_Vetri_Kalagam

Featured

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்றும், 2024 பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் சின்னம், கொடி மற்றும் கொள்கைகளை அறிவித்து மக்களிடம் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து, அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல என்றும், தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் மூலம், தனது 69வது படத்துடன் அவர் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட உள்ளார்.

இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் செயற்குழு கூட்டத்தை சென்னையில் இன்று கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் பிசியாக உள்ள நடிகர் விஜய் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 2026தான் கட்சியின் இலக்கு என்றாலும், அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்குவது குறித்து விவாதிக்கவே இந்த கூட்டம் என்றும், கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிநடை போடும் பெங்களூருக்கு அழுத்தம் கொடுக்குமா பஞ்சாப்..? - தரம்சாலாவில் இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top