Connect with us

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தைவான் வீரர்களுக்கு நடுவானில் கொடுக்கப்பட்ட கவுரவ வரவேற்பு..!!

Featured

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தைவான் வீரர்களுக்கு நடுவானில் கொடுக்கப்பட்ட கவுரவ வரவேற்பு..!!

ஒலிம்பிக்ஸ்-ல் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தைவான் நாட்டு வீரர்களுக்கு அந்நாட்டு அரசு ஆகாயத்தில் அட்டகாசமான வரவேற்பை கொடுத்து கவுரவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் தொடர் கடந்த 11 தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் அமெரிக்க நாட்டை சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று முதல் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் ஒலிம்பிக்ஸ்-ல் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தைவான் நாட்டு வீரர்களுக்கு அந்நாட்டு அரசு ஆகாயத்தில் அட்டகாசமான வரவேற்பை கொடுத்து கவுரவித்துள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் அணிவகுப்புடன் அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளது .

நடுவானில் சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, விமானத்தில் இருந்தபடி தைவான் வீரர்கள் கண்டுரசித்தனர் / இதுவரை இல்லாத அளவில், ஒலிம்பிக்கில் தைவான் வீரர்கள் 2 தங்கம், 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று வசதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” - யோக்ராஜ் சிங் ஆவேசம்

More in Featured

To Top