Connect with us

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்கள் ரிலீஸ் தேதி இதுதானா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

Featured

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்கள் ரிலீஸ் தேதி இதுதானா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

இனிய வணக்கம் நண்பர்களே! நாம் இன்று பார்க்கப் போகும் சினிமா அப்டேட் – நடிகர் சூர்யா குறித்தது! சூர்யா சமீபத்தில் நடித்த ரெட்ரோ படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த படம் ஓடிடியில் வரும் 31ம் தேதி முதல் ரிலீஸாக இருக்கிறது.

இதையடுத்து, சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் சூர்யா 45. இந்த படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா மற்றும் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு தற்போது 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பேட்ச் ஒர்க் மட்டும் மீதமுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை முடித்தவுடன், சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்தில் நடிக்கவுள்ளார். இப்போது முக்கியமான அப்டேட் – சூர்யா 45 படம் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. சூர்யா 46 படம் 2026ம் ஆண்டு மே 1ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹன்சிகா மோட்வானி விவாகரத்து! 4 ஆண்டில் முடிந்த திருமணம்

More in Featured

To Top