Connect with us

போடு வேற லெவல் – ரசிகர்களின் ஆதரவால் 200 கோடி வசூலை தாண்டியது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்..!!

Cinema News

போடு வேற லெவல் – ரசிகர்களின் ஆதரவால் 200 கோடி வசூலை தாண்டியது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்..!!

ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளம் மட்டுமின்றி தற்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தாறுமாறாக கொண்டாட வைத்துள்ள படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

மிகவும் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளிவந்த இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று திரையரங்குகளில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது .

மலையாளத்தில் சக்கைபோடு போட்ட இப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கும் முன் தமிழில் வெளியானது .பொதுவாக எந்த மொழி படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் நல்ல வரவேற்பை கொடுக்கும் நம்ப தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கும் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 52 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுமட்டுமின்றி இப்படம் உலகளவில் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் மலையாள திரையுலகில் 200 கோடி கலைக்சனில் இணையும் முதல் படம் இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : ராஜஸ்தானிடம் மீண்டும் பணிந்தது மும்பை அணி..!!!

More in Cinema News

To Top