Connect with us

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியீடு..

Featured

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியீடு..

பிரபல இயக்குநர் அட்லீ மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் இருவரும் முதன்முறையாக இணையும் புதிய திரைப்படம் “AA22xA6” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெருமைமிக்க திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக இளம் சென்சேஷன் சாய் அப்யங்கர் பணியாற்றுகிறார். சுமார் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ஹீரோயின் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சிறப்பு வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதில், இந்தப் படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில், தீபிகா படுகோன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தனுஷை நேரடியாக சீண்டிய விக்னேஷ் சிவன்? 😳 நயன் B’day gift வைரல்!”

More in Featured

To Top