Connect with us

தக் லைஃப்’ படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியது – உலகளவில் எவ்வளவு தெரியுமா?

Featured

தக் லைஃப்’ படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியது – உலகளவில் எவ்வளவு தெரியுமா?

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் மணி ரத்னம் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முடிவை வைத்தது ‘தக் லைஃஃப்’ என்ற திரைப்பட அறிவிப்பு.

இந்த படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஜூன் 5ம் தேதி திரைக்கு வந்த ‘தக் லைஃஃப்’ படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. பலர், ‘நாயகனை மிஞ்சும் படமாக இருக்கும்’ என்ற நம்பிக்கையில் பார்த்தபோதும், படத்தின் நீளமும் கதையின் போக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.

இந்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தாலும், வசூலில் படம் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? சிம்ரன் மாஸ் அப்டேட்!

More in Featured

To Top