Connect with us

சமந்தா அழுதா? நானும் அழுவேன்!” – இயக்குநர் சுதா கொங்கரா உருக்கமான எமோஷனல்..

Featured

சமந்தா அழுதா? நானும் அழுவேன்!” – இயக்குநர் சுதா கொங்கரா உருக்கமான எமோஷனல்..

முன்னணி நடிகை சமந்தா, கடந்த சில ஆண்டுகள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், திரையுலகில் தனது அந்தஸ்தை இழக்கவில்லை. தென்னிந்திய சினிமாவில் கலக்கி, இந்திய அளவிலும் பிரபலமானவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் சீரிஸ், சுமாரான வரவேற்பு பெற்றாலும், சமந்தாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.

இப்போது சமந்தா, அட்லீ – அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம் சரண் – சுகுமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்திலும் நடிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு உருவாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

ஒரு விருது விழாவில் இயக்குநர் சுதா கொங்கரா, “நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருக்கிறேன். அவர் அழுதால் நானும் அழுவேன். அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். சமந்தாவின் ஊ அண்ட்டாவா எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று பேசினார்.

அதன்பின், சுதா கொங்கராவிடம், “சமந்தாவுடன் எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?” என தொகுப்பாளினி கேட்டார். உடனே, “கண்டிப்பா சமந்தாவுடன் படம் பண்ணவேன்” என சுதா கூற, சமந்தா, “எனக்கு ஆக்ஷன் படம் பண்ணனும்” என உற்சாகமாக பதிலளித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாடகியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்… கோபத்தில் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை !

More in Featured

To Top