Connect with us

கத்தை கத்தையா ஆதாரம் இருக்கு… என் மேல கேஸ் போட தைரியம் இருக்கா? – சுசித்ரா சவால்!

Featured

கத்தை கத்தையா ஆதாரம் இருக்கு… என் மேல கேஸ் போட தைரியம் இருக்கா? – சுசித்ரா சவால்!

பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் “Naadhas” என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் திரையுலகில் கொக்கைன் போன்ற போதைப் பொருள்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “சுச்சி லீக்ஸ்” விவகாரத்தின் போது நடிகை த்ரிஷா மற்றும் இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் என்னிடம் கொக்கைன் இருப்பதாகவும், அதை நான் விநியோகித்து வருகிறேன் என்றும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறை என் வீட்டில் இரண்டுமணி நேரம் சோதனை நடத்தி, எனது ரத்த மாதிரிகளையும் எடுத்துச் சென்றது. ஆனால் எனக்கெதிராக எந்தத் தவறும் கண்டறியப்படவில்லை.

இது குறித்து சுசித்ரா மேலும் தெரிவிக்கையில், “நான் இதனை ஏற்கனவே பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளேன். இந்தத் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்ட பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களின் பெயர்களை மிகத் தைரியமாக கூறி இருக்கிறேன். ஆதாரம் இல்லாமல் நான் பேசவில்லை. என்னிடம் 23 வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளன. அதேபோல் பல எழுத்துப்பூர்வ ஆதாரங்களும் இருக்கின்றன. என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார்,” என கூறினார்.

சினிமாவில் கொக்கைன் புழங்க காரணமாக இருப்பது ஒரு முன்னணி நடிகரே என அவர் குற்றம்சாட்டினார். தற்போது அந்த நடிகர் துபாயில் இருக்கிறார் என்றும், சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டால் கொக்கைன் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்றும் சுசித்ரா தெரிவித்தார். இதே நேரத்தில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கெவின் ஆகியோர் கொக்கைன் பயன்படுத்தியதாகவும், விநியோகம் செய்ததாகவும் கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதைப் பற்றியும் சுசித்ரா கருத்து தெரிவிக்கையில், “இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் மட்டும்தான் பலி ஆடாக மாட்டியுள்ளார். கிருஷ்ணாவுக்கு அரசியல் ஆதரவு இருப்பதால், அவர் எளிதாக விடுபட வாய்ப்பு உள்ளது. ஒரு மூத்த இயக்குநருக்கே அவரது இயக்கத்தில் நடித்த நடிகை ஒருவர் முதன்முதலாக கொக்கைனை அறிமுகப்படுத்தினார்,” எனவும் கூறினார். மேலும், அந்த நடிகையை நடிகர்கள் அரவிந்த் சாமி மற்றும் அர்ஜுன் எச்சரித்ததாகவும், இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்று கடிந்து கொண்டதாகவும் சுசித்ரா தெரிவித்தார்.

தற்போதைய விசாரணையின் முடிவில், தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளதைக் குறித்தும், மேலும் ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றும் சுசித்ரா கூறினார். அவர் உயர்தர போதைப்பொருளை நெருக்கமானவர்களுக்கு, தரம் குறைந்த கொக்கைனை பிறருக்கு விநியோகிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசித்ராவின் இந்தக் கருத்துகள் தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

See also  லண்டனில் ராஜா போல அந்தோணி தாசன் – சொடக்கு ஸ்டைலில் மாஸ் போஸ்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top