Connect with us

பேட்டிங்கில் அடுத்தடுத்து வீழ்ந்த SRH வீரர்கள் – KKR அணிக்கு 160 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் அடுத்தடுத்து வீழ்ந்த SRH வீரர்கள் – KKR அணிக்கு 160 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற குவாலிபியர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் SRH – KKR அணிகள் விளையாடி வருகிறது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .

அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இதில் அணிக்கு அதிரடியான ஆட்டத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மறுபக்கம் விளையாய்டு அபிஷேக் சர்மாவும் 3 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த திரிபாதி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதி கட்டத்தில் வந்த கேப்டன் கம்மிங்ஸ் தன்னால் முடிந்ததை செய்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வென்று இறுதிப்போட்டிக்கு செல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 திரையரங்குகளைத் தவிர்த்து ஓ.டி.டி.-யில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷின் ‘லக்கி’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 🎬📱

More in Featured

To Top