Connect with us

அஜித் பிறந்தநாளுக்கு பில்லா ரீரிலீஸ் கொண்டாட்டம்!

Cinema News

அஜித் பிறந்தநாளுக்கு பில்லா ரீரிலீஸ் கொண்டாட்டம்!

அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பெரிய திரையரங்கு விருந்தாக ‘பில்லா’ படம் மீண்டும் மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. 2007ஆம் ஆண்டு வெளியான இந்த ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படம், அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குறிப்பாக அவரது லுக், ஸ்கிரீன் பிரசென்ஸ், மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களிடம் இன்னும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்னும் சிறப்பாக்கும் வகையில் இந்த ரீரிலீஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் #BillaReRelease என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் பேனர், பாலாபிஷேகம், கொண்டாட்ட திட்டங்களுடன் தயாராகி வருகின்றனர். மே 1ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு திரை திருவிழாவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top