Connect with us

ரயில் பிரியர்களின் கவனத்திற்கு : செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

Featured

ரயில் பிரியர்களின் கவனத்திற்கு : செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூரு வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.

எனவே ரயில் பிரியர்கள் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்பட உள்ள இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Featured

To Top