Connect with us

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம்: ஜோதிகாவின் ஓபன் டாக்..

Featured

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம்: ஜோதிகாவின் ஓபன் டாக்..

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் “உடன்பிறப்பே” என்ற படத்தில் நடித்தார். இப்படம் நேரடியாக OTT-ல் வெளியானது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் “காதல் தி கோர்” படத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்தார்.

இப்போது, பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் “சைத்தான்” மற்றும் “ஸ்ரீகாந்த்” படங்கள் இந்தியில் வெளியானது. இந்த ஆண்டில் “Dabba Cartel” என்ற வெப் தொடர் வெளியானது. இந்த நிலையில், ஜோதிகா தென்னிந்திய சினிமாவைப் பற்றி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தான் அதிகம். பெண்களை பாடல்களில் நடனமாட வைப்பதற்கும், ஆண்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டும் பயன்படுத்துகிறார்கள். இது தற்போது வரை தொடர்ந்திருக்கின்றது. ஆனால் நான் வேறு பாதையை தேர்ந்துகொண்டேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்தேன். பெரும் பாலும் உள்ள படங்களுக்கு நான் ‘நோ’ சொன்னேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top